தருமபுரி மாவட்டம், காரியமங்கலம் அருகே உள்ள மேக்னம்பட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் அருண்குமார்(27). சரக்கு வாகன ஓட்டுநர். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அருண்குமாரை இன்று கைது செய்தனர். மேலும், அந்த மாணவியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி மாணவி அளித்த கடத்தல் புகாரின் பேரில், அருண்குமாரை போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.