அரூர் : தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மது கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றன. மேலும் கடை முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
6 அடி இடைவெளியில், ஐவருக்கு மிகாமல் நின்று மது வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள மதுக்கடையில், மது வாங்க கடை திறப்பதற்கு முன்பே, காலை 7 மணியிலிருந்து நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்தனர்.
விற்பனையின்போது தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்ற ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மதுக்கடை முன்பு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.