தர்மபுரி: பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டு குடிநீர் திட்ட கணவாய் வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 42 வயதான மக்னா யானை காயங்களுடன் இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்து அங்கியே புதைத்தனர். காட்டு யானையை அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது சுட்டுக் கொன்றனரா? அல்லது நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நாளை இவ்வரிக்கை கிடைக்கப்பெறும் என்றும், கிருஷ்ணகிரி வன சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விடைபெற்றது "மிஸ்டர் கபினி"