தர்மபுரி: பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேடியப்பன் (33), மோகனா தம்பதி. கடந்த 2008 -2009 ஆண்டில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வேடியப்பன் எழுதியுள்ளார். அந்த தேர்வில் தேர்ச்சிபெற்று அனைத்து தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆனால் கட்ஆப் மதிப்பெண் வரும்பொழுது, அதில் வேடியப்பன் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தனது மதிப்பெண் சான்றிதழ், தான் எழுதிய ஓஎம்ஆர் சீட் நகல் ஆகியவற்றைக் கேட்டு காவல்துறை இயக்குநருக்கு மனு அனுப்பினார். ஆனால் அந்த மனுவிற்கு காவல் துறை சார்பில் எந்தவிதமா பதிலும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் வேடியப்பன் தனது மனைவி மோகனாவுடன் இன்று (ஆக.23) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
அப்போது மோகனா திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவல மேல்மாடியில் ஏறி நின்று, தனது கணவருக்கு காவல்துறையில் வேலை வழங்கவேண்டும், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறை அலுவலர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து காவல் துறையினர் தம்பதியிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல - கிங் காங்கை காதலித்த பெண்