தர்மபுரி: பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 7 நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று காலை நீர்வரத்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இன்று 60 ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 8 ஆவது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக மழை பொழிவு குறைந்ததால் நீர்வரத்து மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வீடு மாற்றும்போது மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு