தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளி கரம்புகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அப்பாதுரை (38). இவரது மனைவி சாம்மந்தி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது, 60 அடி கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை தூக்கும் வேலைக்காக அப்பாதுரை இன்று (நவ. 04) சென்றுள்ளார்.
கிணற்றிலிருந்து மோட்டரை மேலே தூக்கும்போது, கால் நிலைதடுமாறி அப்பாதுரை கிணற்றினுள்ளே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பாலக்கோடு காவல் துறையினர், அப்பாதுரையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தவறி விழுந்த செல்போனை எடுக்க 60 அடி தண்ணீரை வெளியேற்றிய விவசாயி!