ETV Bharat / state

வீணாக ஆற்றில் கலக்கும் மழைநீரை ஏரிக்கு கொண்டுவந்த தன்னார்வலர்கள் - வீணாக ஆற்றில் கலக்கும் மழைநீரை

தர்மபுரி: வீணாகச் சென்ற உபரிநீரை அழகு அரூர் அமைப்பு தன்னார்வலர்கள் 500 மணல் மூட்டைகளை அடுக்கி அரூர் பெரிய ஏரிக்கு கொண்டுசென்றனர்.

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்
author img

By

Published : Jan 7, 2021, 10:46 PM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு கொளகம்பட்டி கல்லாற்றின் குறுக்கே உள்ள கார ஒட்டு பகுதியிலிருந்து கால்வாய் வழியாகத் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் வாணியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

வீணாக ஆற்றில் கலக்கும் மழைநீரை
வீணாக ஆற்றில் கலக்கும் மழைநீர்

இதனையடுத்து, வாணியாறு அணையில் கடந்த ஒரு மாத காலமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இந்த உபரிநீரால், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டிபுதூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழியும். இந்தத் தண்ணீர் கல்லாற்றில் கலந்து தென்பெண்ணை ஆற்றுக்குச் செல்கிறது.

மழைநீரை ஏரிக்கு கொண்டு வந்த தன்னார்வலர்கள்
மழைநீரை ஏரிக்கு கொண்டுவந்த தன்னார்வலர்கள்

இந்நிலையில் கல்லாற்றில் கொளகம்பட்டி அருகே உள்ள காரை ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனை அறிந்து தன்னார்வலர்கள் அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீரைக் கொண்டுசெல்ல முயற்சி செய்தனா்.

இதனையடுத்து சார் ஆட்சியர் மு. பிரதாப் உதவியுடன், மணல் மூட்டைகளை அழகு அரூர் அமைப்பு, பேரூராட்சி நிர்வாகம், அரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒன்றிணைந்து, அரூர் பெரிய ஏரி தண்ணீர் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அரூர் நகர் பகுதியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி சுற்றியுள்ள சுமார் 20 கி.மீ. பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீா் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வீணாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் மழைநீரை முயற்சி செய்து தங்கள் உடல் உழைப்பை வழங்கி ஏரிக்கு தண்ணீா் கொண்டு சென்ற அழகு அரூா் அமைப்பினரை பொதுமக்களும் விவசாயிகளும் வெகுவாக பாராட்டிவருகின்றனா்.

இதையும் படிங்க: சகாயம் வந்தால் அவருக்கு சகாயம் செய்யுமா அரசியல்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.