தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு மகளிர் கல்லூரி ஆகும். மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் மகளிர் கல்லூரி என்பதால் இக்கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் கல்லூரி முடியும் நேரத்தில் போதுமான பேருந்து வசதி இல்லாததால் கூடுதல் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரி மாணவிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இவர்களது கோரிக்கை, கோரிக்கை ஆகவே இன்று வரை இருந்து வருகிறது.
குறித்த நேரத்தில் இரண்டு பஸ்கள் மாறி செல்ல வேண்டி உள்ளதால் கல்லூரி விடும் நேரத்தில், கிடைக்கக்கூடிய பேருந்தில் ஏறி தர்மபுரியில் இறங்கி தங்கள் ஊருக்குச்செல்ல கூடிய மற்றொரு பேருந்தில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு பேருந்தில் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் ஆபத்தையும் உணராமல் மாணவிகள் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலையும் உள்ளது.
இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வேண்டுமென்றே படியில் பயணம் செய்த நிலைகள் மாறி மாணவிகள் பேருந்தில் இடம் இல்லாததால் தொங்கியபடி செல்லும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதை பார்க்கும் தமிழ்நாடு அரசு இனியாவது கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே இக்கல்லூரி மாணவிகளின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: கோடம்பாக்கம் சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு