ETV Bharat / state

போலியோ சொட்டு மருந்து வழங்கவந்த பணியாளர்கள்: சிறைப்பிடித்த கிராம மக்கள்! - மருத்துவரை நியமிக்கக் கோரி மருத்துவ ஊழியர்கள் சிறைப்பிடிப்பு

தர்மபுரி: பென்னாகரம் அருகே சுகாதார நிலையத்திற்கு மருத்துவரை நியமிக்கக் கோரி போலியோ சொட்டு மருந்து வழங்கவந்த பணியாளர்களை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.

polio drops
polio drops
author img

By

Published : Feb 1, 2021, 11:05 AM IST

தர்மபுரி பென்னாகரம் வட்டம், நாகமரை ஊராட்சிக்குள்பட்ட ஏமனூர் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். கிழக்கு ஏமனூர், மேற்கு ஏமனூர், அருந்ததியர் நகர், ஆத்து மேட்டூர், தோழன் காட்டுவளவு, சிங்காபுரம், கொங்கரப்பட்டி, குளிப்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் இதுவரை மருத்துவரோ, செவிலியரோ நியமிக்கப்படவில்லை.

ஏமனூரிலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 28 கிமீ தொலைவிலுள்ள ஏரியூர் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மருத்துவம், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து இப்பகுதி மக்கள் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏரியூர் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திலிருந்து மருத்துவர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சதீஷ், செவிலியர் மாலதி, ஜெயம்மாள் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஏமனூரில் உள்ள குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காகச் சென்றனர். மருத்துவக் குழுவினரைச் சுற்றிவளைத்த ஏமனூர் பொதுமக்கள், மருத்துவரை நியமிக்கக்கோரி அவர்களைச் சிறைப்பிடித்தனர்.

போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்குப் போட்டுக்கொள்ள மாட்டோம் என்று நிராகரித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரியூர் காவல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மருத்துவப் பணியாளர்களை விடுவித்தனர். போலியோ சொட்டு மருந்து வழங்கச் சென்ற மருத்துவக் குழுவினர் கிராம மக்கள் 2 மணிநேரம் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.