தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் இன்று (அக்.14) மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது மேலாளர் ரவியின் அறையில் கணக்கில் வராத 15 ஆயிரத்து 500 ரூபாய் இருப்பதைக் கண்டறிந்த அலுவலர்கள், பணத்தைக் கைப்பற்றி அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வெளியில் இருந்து வெகுமதிகளும் பரிசுப்பொருள்களும் வழங்கப்படும் என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் இன்று தர்மபுரியில் நடைபெற்றது குற்ப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படிக்கச்சொல்லி வற்புறுத்தியதால் தாயைக்கொன்ற 14 வயது மகன்; சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு