தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, அதிரடியாக நுழைந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் 5-க்கும் மேற்பட்டோர் இன்று (நவ.10) மாலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் எவ்வளவு பணம் சிக்கியது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதேபோல், கடந்த வாரம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிப்பட்ட அலுவலர்கள்!