ETV Bharat / state

இளைஞரை காளை முட்டி தூக்கி வீசிய வீடியோ; தருமபுரி 'எருதுவிடும் விழா'வில் நடந்த சோகம் - தருமபுரி குப்பாண்டி தெரு எருதுவிடும் விழா

தருமபுரி குப்பாண்டி தெருவில் நடைபெற்ற 'எருதுவிடும் விழா'வில் இளைஞர் ஒருவரை காளை ஒன்று முட்டி வீசி தூக்கி எறியும் மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 18, 2023, 3:05 PM IST

இளைஞரை காளை முட்டி தூக்கி வீசிய வீடியோ; தருமபுரி 'எருதுவிடும் விழா'வில் நடந்த சோகம்

தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி(Pongal Festival), புகழ்பெற்ற 'எருதுவிடும் விழா' நடைபெறுவது வழக்கம். தருமபுரி நகர்ப் பகுதிகளில் விநாயகர் கோயில் தெரு, குப்பாண்டி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு உள்ளிட்டப் பகுதிகளின் வழியாக இளைஞர்கள் காளைகளை கயிறு கட்டி சாலையில் அடக்குவர்.

இந்நிலையில், தருமபுரி நகர் பகுதி குப்பாண்டி தெருவில் இன்று நடந்த 'எருதுவிடும் விழா'வில் (Dharmapuri erudhu vidum vizha 2023) காளைகளை கயிறுகள் மூலம் இளைஞர்கள் அடக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக காளையின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை, காளை கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென முட்டி தூக்கி வீசியது. இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்தார்.

பின், அந்த இளைஞரை அங்குள்ளவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனிடையே எருதுவிடும் விழாவின் போது, அந்த இளைஞரை காளை முட்டி தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: ஆதமங்கலம் புதூர் மாடு விடும் திருவிழா கோலாகலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.