ETV Bharat / state

ஊருக்குள் புகுந்து கோழியை கவ்விச் சென்ற சிறுத்தை! - வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் புகுந்த சிறுத்தை வெங்கடாசலம் என்பருக்கு சொந்தமான இடத்தில் கோழியை கவ்வி செல்லும் வீடியோ காட்சி வைரலயாகி வருகிறது.

பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை கோழியை கவ்வி செல்லும் வீடியோ காட்சி -கிராம பொதுமக்கள் பீதி

author img

By

Published : May 15, 2022, 2:45 PM IST

தர்மபுரி: பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று (மே14) இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று விவசாயி வெங்கடாசலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள கோழியை பிடித்துக்கொண்டு வனப்பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை கோழியை கவ்வி செல்லும் வீடியோ காட்சி -கிராம பொதுமக்கள் பீதி

தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். வனத்துறையினர் விரைந்து சிறுத்தையை பிடிக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி - சிறுத்தையை பின்தொடரும் கருஞ்சிறுத்தையின் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.