ETV Bharat / state

2 லாரிகள் ஒரு கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - etv news

தர்மபுரி: தொப்பூர் கணவாய்ப் பகுதியில் இரண்டு லாரிகள் ஒரு கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

லாரிகள்  ஒரு கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

author img

By

Published : Apr 2, 2021, 6:49 AM IST

தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய்ப் பகுதியில் இன்று இரவு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சேலம் நோக்கிவந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஒரு லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு லாரிகளுக்கு இடையே கார் ஒன்று சிக்கி விபத்துக்குள்ளான நிலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த சத்யவாணி (35) என்ற பெண்ணும் லாரியின் சக்கரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய சத்யவாணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இரண்டு லாரிகளுக்கு இடையில் காரில் சிக்கிய தம்பதி நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும், விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மார்ச்சில் இரட்டிப்பான வாகன விற்பனை: அசத்தும் மாருதி, டோயோட்டா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.