தருமபுரி: குளிர்சாதனப் பெட்டியில் அரசு மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி, பெல்ரம்பட்டி பகுதியில் மதுபானங்கள் கள்ளத்தனமாக பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் காவலர்கள் விரைந்துசென்று பெல்லம்பட்டி மணி, சித்துராஜ் வீடுகளில் சோதனைசெய்தனர். இந்தச் சோதனையில் மீன்கள் பதப்படுத்த பயன்படுத்தும் பிரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டியில்) டாஸ்மார்க் மதுபானங்களை வாங்கி பதுக்கிவைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு குறிப்பிட்ட வகை பீர் வகைகளை மது பிரியர்கள் விரும்பி வாங்குவார்கள். மது பிரியர்கள் அதிகமாக வாங்கும் பீர் பாட்டில்களை இவர்கள் மொத்தமாக வாங்கி தங்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் பதுக்கி வைத்திருந்த 73 மது பாட்டில்களை பறிமுதல் செய்து மணி (43), சித்துராஜ் (40) இருவரையும் காவல் துரையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட மீனவர்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துகள்