தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனசரகத்திற்குள்பட்ட மசக்கல், காப்புக்காடு, தாளப்பள்ளம், புதுக்காடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் நாய்கடித்து இறந்துள்ளது.
இந்நிலையில், இறந்த மான் கறியை புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாபு, சேட்டு என்ற இருவர் எடுத்துவருவதாக பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், அங்கு ரோந்து சென்ற வன அலுவலர்கள் மான் கறியைக் கொண்டுசென்ற இருவரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து 10 கிலோ அளவுள்ள மான்கறியைப் பறிமுதல்செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் வனச்சட்டத்தின்படி மான் கறியை கொண்டுவந்த குற்றத்திற்காக மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படி ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பூனைக் கறியை மான் கறி எனக் கூறி விற்றவர் கைது!