தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள முத்தானூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் முத்தானுர் பகுதிகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இருவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகன், மாரியப்பன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து 125 லிட்டர் கள்ளச்சாராயம், மற்றும் 400 லிட்டர் ஊறல்களை கைப்பற்றிய மதுவிலக்கு காவல்துறையினர் அவற்றை அழித்தனர்.