தர்மபுரி: தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்குத் தேர்வு முடிந்து கோடை விடுமுறைவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாட தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று (மே 15) காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்து உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவியில் உற்சாகமாக குளித்தும் பரிசலில் சென்றும் ஒகேனக்கல் காவிரிஆற்றின் அழகை ரசித்தனர்.
நேற்று (மே 14) மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் பகுதியில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து, நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அட...!' பாதுகாவலர்கள் சாப்பிடும் வரை காத்திருந்த புதுச்சேரி முதலமைச்சர்!