தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் குடியரசு தின விடுமுறையை கொண்டாட இன்று காலை முதலே வெளி மாவட்டம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கினர்.
விடுமுறை தினத்தை முன்னிடடு, இன்று அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை தந்ததால், அப்பகுதி முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி, சிறிய அருவிகளில் குளித்தும், தொங்கு பாலத்திலிருந்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தும், பரிசலில் பயணம் செய்தும் சுற்றுலாவை இனிமையாக கொண்டாடினர்.
இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம்!