சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. தருமபுரியின் தொப்பூர் கணவாய் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது அதன் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையில் சென்றுகொண்டிருந்த மினி லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்களை மீது மோதி பாலத்தின் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனம், இரண்டு மினி லாரிகள், 12 கார்கள் அடுத்தடுத்து மோதி உருக்குலைந்து போயின. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த 5க்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. மீட்புப் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தொப்பூர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : மீனம்பாக்கத்தில் பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு