தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த காடுசெட்டிப்பட்டி பகுதியில் ஓசூரிலிருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த தாழ்வான விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயம் ஏதேமின்றி உயிா்தப்பினார். இதனிடையே, லாரி டேங்கரிலிருந்து சமையல் எண்ணெய் நெற்பயிர் வயலில் கொட்டியது. இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் அங்கு வந்து குடம் குடமாக சமையல் எண்ணெயை பிடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பஞ்சப்பள்ளி காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: லாரி- ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்!