ETV Bharat / state

சிறந்த காவல் நிலைய விருது தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடம். - தருமபுரி நகர காவல் நிலையம்

தமிழ் நாட்டில் சிறந்த காவல் நிலையங்களில் தர்மபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
author img

By

Published : Jan 24, 2020, 5:01 PM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் சிறந்த சேவையாற்றும் காவல் நிலையங்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் ,கேடயமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. வருகிற குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையங்களுக்கு பரிசு வழங்குவதற்கான மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்ட காவல்துறை 3 உட்கோட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 27 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 900க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தருமபுரி நகர காவல் நிலையம் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1862-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் 80 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது பெற தகுதிகள் :

ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுதல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், அனைத்து பதிவேடுகளும் கணினியில் பயன்படுத்துதல், கொலைக் குற்றங்களை விரைந்து கண்டுபிடித்தல், காவல் நிலையத்தில் சுற்றுச்சூழலை பராமரித்தல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்தல், பதிவேடுகளை சீரிய முறையில் பராமரித்தல் உள்ளிட்ட 27 வகையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை சரியாக பின்பற்றும் காவல் நிலையங்களே தகுதி பெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் காவல் நிலையத்திற்கு அருகில் பூச்செடிகளை வைத்து, பராமரித்து, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கனிவோடு பேசி புகார் மனுவை பெற்று, உரிய தீர்வு காண காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தி வந்துள்ளார். மேலும் அளிக்கவரும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை உயர் அதிகாரிகள் குழு தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்த்து, ஒவ்வொரு ஆவணத்திற்கும் தனித்தனியாக மதிப்பெண்களை வழங்கி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காவல் நிலையத்திற்கு தமிழ்நாட்டின் மூன்றாவது சிறந்த காவல்நிலையம் என்ற விருதினை அரசு அறிவித்துள்ளது. இதற்கான விருதினை வருகிற குடியரசு தினவிழாவில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் முதலமைச்சரிடம் இருந்து பெற உள்ளார். தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களில் மூன்றாவது இடத்தை தருமபுரி நகர காவல் நிலையம் பெற்றிருப்பது தருமபுரி மக்கள் மத்தில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க :கோரிக்கைகளை நிறைவேற்றுக: ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Intro:தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.Body:தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.Conclusion:தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்ட காவல்துறை 3 உட்கோட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 27 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 900 மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தருமபுரி நகர காவல் நிலையம் ஆங்கிலேயர்கள் காலத்தில் 1862-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் 80 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் சிறந்த சேவையாற்றும் காவல் நிலையங்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

சிறந்த காவல் நிலையம் என்ற தகுதி பெற தகுதிகள்
ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுதல், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்கு பதிவுகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், அனைத்து பதிவேடுகளும் கணினியில் பயன்படுத்துதல், குற்றவாளிகளை கைது செய்தல், அதிகளவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வது, மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள் கைது செய்வது, கொலைக் குற்றங்களை விரைந்து கண்டுபிடித்தல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைந்து முடித்தால், காவல் நிலையத்தில் சுற்றுச்சூழலை பராமரித்தல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்தல், பதிவேடுகளை சீரிய முறையில் பராமரித்தல் உள்ளிட்ட 27 வகையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை சரியாக பின்பற்றும் காவல் நிலையங்களே தகுதி பெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் அரசு வழங்கும் பாராட்டு சான்று மற்றும் சிறந்த சேவைக்கான விருதை பெறுவதற்கு மாவட்டத்தில் உள்ள 27 காவல் நிலையங்களும் தங்களது காவல் நிலையங்களை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் நகர காவல் நிலையத்தை பராமரிப்பு செய்து வந்துள்ளார். காவல் நிலையத்திற்கு அருகில் பூச்செடிகளை வைத்து, பராமரித்தல், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கனிவோடு பேசி புகார் மனுவை பெற்று, உரிய தீர்வு காண காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தி வந்துள்ளார். காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களை அழைத்து செல்ல மூன்று சக்கர வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் விபத்து, குற்றப்பிரிவு என தனித்தனி அறைகள் ஒதுக்கி, காவலர்களை பணியமர்த்தி விரைவாக பணியை முடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையங்களுக்கு வரும் புகாரில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியும், விரைந்து வழக்கை முடித்து நீதி பெற்று தந்து வருகிறார். அரசு தெரிவித்த கட்டுப்பாடுகள், ஆவணங்களை முறையாக பராமரித்து வந்த தருமபுரி நகரகாவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், தமிழக அரசு விருதுக்காக பரிந்துரை செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை உயர் அதிகாரிகள் குழு தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். அப்போது ஆவணங்களை சரிபார்த்து, ஒவ்வொரு ஆவணத்திற்கும் தனித்தனியாக மதிப்பெண்களை வழங்கி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வருகிற குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையங்களுக்கு பரிசு வழங்குவதற்கான மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதற்கான விருதினை வருகிற குடியரசு தினவிழாவில் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் முதலமைச்சரிடம் இருந்து பெற உள்ளார். தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களில் மூன்றாவது இடத்தை தருமபுரி நகர காவல் நிலையம் பெற்றிருப்பது தருமபுரி மக்கள் மத்தில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.