தமிழ்நாடு முழுவதும் இன்று 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் காலை 9 மணிக்கு தனது வாக்கினை திண்டிவனத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து, தருமபுரி மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 74.03 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தான் போட்டியிடும் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் 32 மற்றும் 33 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வாக்குப் பதிவு மையத்தை பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தருமபுரியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.