ETV Bharat / state

தேர்தலில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம்! - பாப்பிரெட்டிபட்டி

தருமபுரி : தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

dharmapuri
author img

By

Published : Apr 5, 2019, 8:23 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் பணியாற்றவிருக்கும் மண்டல அளவிலான மேற்பார்வையாளர்களுக்கானப் பயிற்சிக் கூட்டம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பார்வையாளர் தேவேந்திர குமார் ஜனா, காவல் பார்வையாளர் யுகேந்திர சிங், மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ் குமார் பெஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மண்டல மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம்

அக்கூட்டத்தில், வாக்குசாவடிகளில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தேர்தல் நடக்கும் நாளன்று வாக்குசாவடிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், இப்பயிற்சியில் காவல்துறை, வருவாய்துறை மற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Intro:TN_DPI_01_05_ELECTION MEETING _VIS_7204444

Body:TN_DPI_01_05_ELECTION MEETING _VIS_7204444

Conclusion:தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி .அரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மண்டல மேற்பார்வையாளர் பயிற்சிக் கூட்டம்.... தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர் அளவிற்கான பயிற்சிக் கூட்டம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இப்பயிற்சி கூட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் தேவேந்திர குமார் ஜனா காவல் பார்வையாளர் யுகேந்திர சிங்.பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ்குமார் பெஸ்ரா இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாக்குசாவடிகளில் பணியாற்றும் மண்டல மேற்பார்வையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எவ்வாறு மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது மற்றும் தேர்தல் நடக்கும் நாள் அன்று வாக்குச் சாவடிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது மக்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் காவல்துறையினர் வருவாய் துறையினர் மற்றும் தேர்தல் மண்டல மேற்பார்வையாளர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி சார் ஆட்சியர் சிவனருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.