ETV Bharat / state

அத்தியாவசியப் பொருள்களின்றி அவதிக்குள்ளாகும்  அகதிகள்!

தர்மபுரி: அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல், தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் மக்கள் அவதி

author img

By

Published : May 27, 2021, 12:07 PM IST

Updated : May 27, 2021, 1:21 PM IST

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாமில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் கட்டட வேலை உள்ளிட்ட தினக்கூலி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அண்மையில் இலங்கைத் தமிழர் முகாமிலுள்ள 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

அதில் 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து முகாமைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து சீல் வைத்தனர்.

தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் அவதி

இதன் காரணமாக, கடந்த 15 நாட்களாக முகாம் மக்கள் பால், மருந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளியே சென்று வாங்க இயலாத நிலையில் உள்ளனர். இதன் காரணமாக, இலங்கைத் தமிழர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை தங்களது பகுதிக்கு வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

Last Updated : May 27, 2021, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.