தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஜூம்மா மசூதி தெருவில் வசிப்பவர் ஜாபர் அலி (26). புது பட்டானியர் தெருவில் வசிப்பவர் அலி ஜான்(26). அவரது மனைவி வஜிதா (24). இவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். அலி ஜான் அவரது மனைவி வஜீதா ஆகியோர் ஈரோட்டில் உள்ள நாடார்மேடு என்ற பகுதியில் வசித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
அலி ஜான் மனைவி கர்ப்பமாக உள்ளதால் அவர் வழக்கமாக பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வருவதாக தெரிவித்து, கணவருடன் ஈரோட்டிலிருந்து அனுமதிபெற்று பாலக்கோடு வந்துள்ளனர். அவர்களுடன் ஜாபர் அலியும் வந்துள்ளார்.
இவர்கள் மூவரும் ஈரோட்டில் கரோனா வைரஸ் அதிம் இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வந்ததால் அக்கம்பக்கத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர்கள் மூவரையும் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தருமபுரி கரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்பதால் வெளிமாவட்டங்களுக்கு சென்றவா்கள் தருமபுரிக்கு வருவது தொடர்கதையாகியுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இதையும் படிங்க: நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதியம் வாங்க குவிந்த மக்கள்