அரசுப் பேருந்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் இழப்பீடு தொகை வழங்குவது வழக்கம். அவ்வாறு,
- கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் 2016ஆம் ஆண்டு அரசுப் பேருந்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு தொகையாக ரூ. 95 லட்சத்து 94 ஆயிரத்து 736 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- இரண்டாவது, தர்மபுரியைச் சேர்ந்த நதிம்அக்தர் என்ற சிறுவன் மீது பேருந்து ஏறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கு ரூ. 4 லட்சத்து 37 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- மூன்றாவது, கூத்தாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் 2007ஆம் ஆண்டு பேருந்தில் செல்லும்போது, பேருந்து டயர் வெடித்து பிரியாவின் கால் எலும்பு முறிந்தது. இதற்குத் தர்மபுரி நீதிமன்றம் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடித்துள்ளது. இதனையடுத்து, தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மூன்று பேருந்துகளைத் தருமபுரி நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அந்தப் பேருந்துகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - 11 பேராசிரியர்களிடம் விசாரணை