ETV Bharat / state

காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய திருடர்களுக்கு தீவிர வலைவீச்சு - திருடர்

தருமபுரி: வாகன திருட்டில் ஈடுபட்ட திருடர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் அவர்களை காவல்துறையினர் கோட்டைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police station
author img

By

Published : Jun 1, 2019, 7:41 AM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளி கிராமத்தைச் சேரந்தவர் கார்த்தி. இவரின் இருசக்கர வாகனம் ஒரு மாதத்திற்கு முன்பு திருடு போனது. வாகன திருட்டு தொடர்பாக காரிமங்கலம் காவல்நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் பொம்மஅள்ளியில் நடந்த கோயில் திருவிழாவிற்கு திருட்டு பைக்குடன் வந்த இருவரை பொதுமக்கள் பிடித்து காரிமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காரிமங்கலம் காவல் நிலையத்தில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிய இரண்டு திருடர்களும் காவல் நிலையத்திலிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர். தப்பியோடியவர்கள் ரவி (26), அபிமன்யூ (25) என தெரியவந்துள்ளது.

பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோயில் உண்டியல் உடைப்பு, இருசக்கர வாகனங்கள் திருட்டு போன்றவை நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.வாகனத்தைத் திருடிய இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் அவர்களை காவல்துறையினர் கோட்டைவிட்டது பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வாகன கொள்ளையர்கள் இருவரையும் காரிமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் காரிமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

--

தருமபுரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய திருடர்கள்   போலீசார்  தீவிர வலைவீச்சு

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளி கிராமத்தை சேரந்த கார்த்தி என்பவருடைய இருசக்கர வாகனம் ஒருமாதத்திற்கு முன்பு திருடு போனது. வாகன திருட்டு தொடர்பாக  காரிமங்கலம் போலீஸில் கார்த்திக் புகாரளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பொம்மஅள்ளியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு திருட்டு பைக்குடன் வந்த இருவரை பொதுமக்கள் பிடித்து காரிமங்கலம் போலீஸில் ஒப்படைத்தனர்.காரிமங்கலம் காவல் நிலையத்தில்
இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிய இரண்டு திருடர்களும் காவல் நிலையத்திலிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர்.

தப்பியோடியவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தட்ரஅள்ளி கிராமத்தை சேரந்த ரவி (26) அபிமன்யூ (25) என்பவர்கள் என தெரியவந்துள்ளது.பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கோவில் உண்டியல் உடைப்பு இருசக்கர வாகனங்கள் திருட்டு போன்றவை நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில் வாகனத்தைத் திருடிய இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் அவர்களை காவலர்கள் கோட்டைவிட்டது பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தப்பியோடிய வாகன கொள்ளையர்கள் இருவரை காரிமங்கலம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் இச்சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

B.Gopal
ETV BHARAT TRAINEE  REPORTER
DHARMAPURI
CELL. 9442854640
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.