தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் லாரியில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள், லாரியை தடுத்து நிறுத்தி வழிப்பறி செய்ததாக, ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகாரளித்தனா். அந்த புகாரில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் கத்தியை காட்டி மிரட்டி கையிலிருந்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததாக கூறப்பட்டிருந்தது.
புகாரை பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் சசியிடம் விசாரணை செய்தனர். காவல் துறையினரின் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். சசியை தனிகவனம் செலுத்தி காவல் துறையினர் விசாரணை செய்ததில் லாரி ஓட்டுநரும் கொள்ளை குறித்து புகார் அளித்தவருமான சசி, அவரது நண்பர்கள் கூட்டுச் சேர்ந்து பணத்தை கொள்ளை அடித்தது போல் நாடகமாடி பணத்தை பங்கு போட்டுக்கொண்டது தெரியவந்தது.
பிளாஸ்டிக் கழிவுகள் கொடுத்தால் சாப்பாடு இலவசம்!
இதனையடுத்து காரிமங்கலம் காவல் துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த வடிவேல், திருப்பதி, விக்னேஷ், தருமபுரி கும்பாரஅள்ளி கார்த்திக், சசி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 95 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு இந்துக்களே காரணம் - மத்திய அமைச்சர்
அதனத் தொடர்ந்து அவர்கள் ஐவரையும் கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பிறகு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.