தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஏலகுண்டூர் கிராமத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, இன்று (நவம்பர் 19) அதிகாலை விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. யானையை மீட்கும் பணியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். யானையை மீட்கும் பணி 11 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
யானைக்கு துப்பாக்கி மூலம் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்கம் அடைந்த பிறகு ராட்சத கிரேன் மூலம் யானையை மீட்க வனத் துறையினர் முயன்றுவருகின்றனர். கிணற்றில் யானை விழுந்தது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "அதிகாலை கரும்புத் தோட்டத்தில் உணவு எடுத்துக்கொண்டு காட்டு பகுதியைச் நோக்கி யானை சென்றபோது, கிராமத்தில் இருந்த நாய்கள் துரத்தியதால் வழிதவறிய யானை கிணற்றில் விழுந்தது" என்றனர்.