தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்யப்படுகின்றன.
நாளை வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்பதால் தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. குண்டு மல்லி கிலோ 1,000 ரூபாய்கும், கனகாம்பரம் கிலோ 800 ரூபாய்கும், சன்ன மல்லி கிலோ 600 ரூபாய்கும், அரளி கிலோ 400 ரூபாயாகவும், பட்டன் ரோஸ் கிலோ 150 ரூபாயாகவும், தாமரை ஒரு மொட்டு 40 ரூபாயாகவும், தாழம்பூ 100 ரூபாயாகவும் விற்பனையானது. கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையான நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஊட்டமலை பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர்