இந்தியாவில் காசிக்கு அடுத்து, காலபைரவருக்கென தனியாக ஆலயம் அமைந்துள்ளது தருமபுரி அதியமான்கோட்டையில் மட்டுமே. அதியமான் மன்னரால் கட்டப்பட்ட இந்த தக்ஷின காசி காலபைரவர் ஆலயம் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
காலபைரவா் அவதார திருநாளை முன்னிட்டு ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி தினமான இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலபைரவர் பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனா். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற எலுமிச்சை, சாம்பல் பூசணி, தேங்காய் தீபம் ஏற்றி காணிக்கை செலுத்தினர். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கால பைரவர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு!