ETV Bharat / state

வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுவர அனுமதிகோரி விவசாயி மனு - ஷாக்கில் அலுவலர்கள் - Collector office

வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுவர அனுமதி வழங்க வேண்டும் என விவசாயி ஒருவர் கையில் பொம்மை ஹெலிகாப்டருடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 12, 2022, 4:33 PM IST

Updated : Dec 12, 2022, 4:50 PM IST

வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுவர அனுமதிகோரி விவசாயி மனு - ஷாக்கில் அலுவலர்கள்

தர்மபுரி: பென்னாகரம் அருகேவுள்ள கே. அக்ரகாரம் மேல் தெருவைச் சேர்ந்தவர், விவசாயி கணேசன் (57). இவர், இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தார். அப்போது, அவரது மகள்கள் கையில் ஹெலிகாப்டர் பொம்மையும், ஹெலிகாப்டர் படமும் வைத்திருந்தனர்.

இது குறித்து விவசாயி கணேசன் பேசும்போது, “என்னுடைய வீட்டிற்கு ஆண்டாண்டு காலமாக சென்று வந்த வழிப் பாதையை வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் நான்கு புறமும் அடைத்து தடுப்புச் சுவர் கட்டியுள்ளனர். இதனால், எனது சொந்த வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. வீட்டுக்குச் செல்ல வேறு வழியில்லாமல் 4 மாதத்திற்கு மேலாக உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளோம்.

இந்த விவகாரம் குறித்து காவல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தரை வழியாக தனது வீட்டிற்குச்சென்று வர முடியவில்லை. அதனால் ஆகாயம் மார்க்கமாக வான் வழியாக ஹெலிகாப்டரில் தான் சென்று வரவேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'புஷ்பா' டயலாக் சர்ச்சை.. மன்னிப்பு கோரிய மனோஜ் திவாரி!

Last Updated : Dec 12, 2022, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.