ETV Bharat / state

பிடமனேரி ஏரியில் 35 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடுவித்த மாவட்ட ஆட்சியர்! - District Collector released the fish seed

தருமபுரி: பிடமனேரி ஏரியில் மீன் வளத்தை பெருக்க 35 ஆயிரம் மீன் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா விடுவித்தார்.

District Collector released the fish seed

author img

By

Published : Nov 23, 2020, 12:48 PM IST

தருமபுரியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020 -2021 மீன்வளத் துறையின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு சொந்தமான குளங்கள், ஏரிகளில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்து உள்நாட்டு மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் தருமபுரி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகள் விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி ஊராட்சி ஒன்றியம் பிடமனேரி ஏரியில் ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் குஞ்சுகள் வீதம் 35 ஆயிரம் மீன் குஞ்சுகளை இன்று (நவ.23) மாவட்ட ஆட்சியர் எஸ்.பி கார்த்திகா விடுவித்தார்.

மீன் குஞ்சுகளை விடுவித்த மாவட்ட ஆட்சியர்

அதேசமயம், மொரப்பூர் அடுத்த அக்ரஹாரம் ஏரியில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 50 ஆயிரம் வரை மீன் குஞ்சுகளும், ஈச்சம்பாடி ஏரியில் 40 ஆயிரம் மீன் குஞ்சுகளும் விடப்பட உள்ளன.

இதையும் படிங்க: செளகார்பேட்டை கொலை வழக்கு: துப்பாக்கி கொடுத்து உதவிய ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.