ETV Bharat / state

அமமுக தொடங்கியதே அதிமுகவை மீட்கத்தான் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் - அமமுக தொடங்கியதே அதிமுகவை மீட்க்கத் தான்

தருமபுரி: அமமுக தொடங்கியதே அதிமுகவை மீட்கத்தான் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

palaniappan
palaniappan
author img

By

Published : Nov 30, 2020, 5:38 PM IST

தருமபுரியில் அமமுகவின் வளர்ச்சிக் கூட்டம் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமமுக கட்சியின் கட்டமைப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறது. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சியில் கட்சி பற்றி பேசக்கூடிய அரசாகத் திகழ்கிறது. கூட்டணி பற்றிகூட அரசு விழாவில் பேசும், அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அமமமுக அவ்வாறு இல்லாமல் கட்டமைப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும் என மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்திவருகிறது. சசிகலா சிறையிலிருந்து வருவார் என்ற ஏக்கம் கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அவரின் வருகையை எதிர்நோக்கி கட்சியினர், தமிழ்நாடே காத்திருக்கிறது.

அமமுக தொடங்கியதே அதிமுகவை மீட்கத்தான்

உண்மையான அதிமுக நாங்கள்தான் பொதுச்செயலாளராக இன்றுவரை சசிகலா நீடிக்கிறார். மறைந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதற்கான ஒரே தகுதி படைத்தவர் சசிகலாதான். அமமுக ஆரம்பிக்கப்பட்டதே அதிமுகவை மீட்கத்தான்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.