தருமபுரி மாவட்டம், தகடூர் புத்தக பேரவை சார்பில் இரண்டாம் ஆண்டு புத்தக விழா நடைபெற்றது. இதை தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் புத்தக விழாவை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ”தருமபுரி மாவட்டத்தில் சென்ற ஆண்டு முதல்முறையாக புத்தக விழா நடைபெற்றது . இந்தப் புத்தக விழாவில் மக்களிடம் எவ்வாறு வரவேற்பு இருக்கும் என எண்ணி நடத்தப்பட்டது.
இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே புத்தகங்கள் விற்பனையாகின. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் புத்தக விழா தொடங்கி மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.