தருமபுரி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று நகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் தருமபுரி பேருந்து நிலையம், சித்தவீரப்பசெட்டி தெரு, அப்துல் மஜீப்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.
சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கண்டுபிடித்து மூன்று வணிக நிறுவனங்களுக்கு 17,000 ரூபாய் நகராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்தனர்.
தருமபுரி நகராட்சி பணியாளர்கள் ஒரு சில கடைகளை மட்டும் குறி வைத்து சோதனை செய்வதாகவும், மற்ற கடைகளில் சோதனை செய்யாமல் விட்டுவிடுவதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள் செய்து அசத்தும் பெண்கள்!