கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்திவருகின்றன.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு டென்ட் மற்றும் பந்தல் அமைப்பாளர் சங்கத்தினர், பேருந்துகளில் பயணம் செய்து தங்கள் ஊர்களுக்குத் திரும்பும் பொதுமக்கள் கைகளை சுத்தமாக கழுவ, புறநகர் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், 4 ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் தற்காலிக தண்ணீா் குழாய் அமைத்துள்ளனா்.
பொதுமக்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தை அவர்கள் எடுத்துக் கூறி வருகின்றனா். இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி செல்கின்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 10 பெண்கள் நியமனம் செய்யப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் முகக்கவசம் தட்டுப்பாடு? - திமுக எம்.பி. கேள்வி