தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சிவாடி பகுதியைச் சேர்ந்தவர் மூக்குத்தி முருகன். தனியார் தொலைக்காட்சி (விஜய் டிவி) நடத்திய சூப்பர் சிங்கர் என்ற பாட்டு நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களாக நடத்தியது.
இப்போட்டிகளில் வாராவாரம் பங்கு பெற்று மக்களுக்கு பிடித்த வகையில் பாடியதால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் மூக்குத்தி முருகன்.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் மூக்குத்தி முருகன் வெற்றி பெற்றார். இதையடுத்து, இன்று தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதி வழியாக சொந்த ஊருக்கு சென்ற மூக்குத்தி முருகனுக்கு சிவாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளம் முழங்க சால்வை அணிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஈடிவி பாரத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்த மூக்குத்தி முருகன், "சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் எழு கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். என் வெற்றிக்கு இணையதளம் மூலம் வாக்களித்த தருமபுரி மாவட்ட மக்கள், தமிழ்நாடு இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப்போல பாடல்களைப் பாட ஆசைப்படும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கும் தருமபுரியில் இசைப்பள்ளி தொடங்கி இலவசமாக பயிற்சி அளிப்பேன்" என்றார்.
இதையும் வாசிங்க : அழகியே ஏ அழகியே...வான் வருவானின் நீல வானழகியே!