கிருஷ்ணகிரி மாவட்ட பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் சார் பதிவாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பணியாளர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர் அந்த அலுவலகமும் இழுத்து மூடப்பட்டது. கரோனா பாதிக்கப்பட்ட சார் பதிவாளர் ஓசூர், காவேரிப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவந்ததாகத் தெரிகிறது.