குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பேனர்களைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்தப் பேனரில் 'குடியுரிமை மசோதா மூலம் சிறுபாண்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு மண்ணிக்க முடியாத துரோகம் செய்யும் மத்திய பாஜக - அதிமுக அரசை கண்டித்து மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' என அச்சிடப்பட்டிருந்தது.
சிறுபான்மையினர் இரண்டு சுழி(ன்)க்கு பதிலாக 'சிறுபாண்மையினர்' என்றும், மன்னிக்க என்ற சொல்லில் இரண்டு சுழி (ன்)க்கு பதிலாக 'மண்ணிக்க' என எழுத்துப் பிழையோடுப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்மொழி வளர்ச்சிக்காக திமுகவில் கலை இலக்கிய அணி என தனி ஒரு பிரிவு உள்ளது. தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கட்சியாக திமுக அறியப்படும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எழுத்துப்பிழை இருந்தது தொண்டர்கள், பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் பாண்டியராஜன் எங்கே? - தமிழிசை ஆய்வாளர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு!