முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் டி ஆர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜிகே மணி தொண்டர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை கொச்சைப்படுத்தும் வகையில், நாகரீகமற்று பேசுவதை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ராசா எங்கிருந்து வந்தார்? எப்படிப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சர், அவர் தாயார் குறித்து பேசுவதற்கு ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?. இது வரம்பு மீறிய பேச்சு” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக, பாமக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசா உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: வெற்றி பெற்றால் சிதம்பர ரகசியத்தைக் கூறுகிறேன்- குஷ்பு