சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலக்கோடு அடுத்த எர்ரண அள்ளி கிராமத்தில் ஏற்கெனவே வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் பெண் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம், எட்டியன்னூர் பகுதிகளுக்குத் திரும்பிய 35 வயது ஆண், 60 வயது பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்துவந்த செவிலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்குச் சென்று திரும்பியுள்ளார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 112 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 62 பேர் சிகிச்சைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தருமபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பெண் செவிலி உள்ளிட்ட 6 பேருக்கு புதிதாக நேற்று(ஜூலை 4) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.