ETV Bharat / state

VIDEO:மின்கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாயில் போடப்பட்ட கான்கிரீட் - Road widening work

தருமபுரி முதல் திருவண்ணாமலை வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியில் அரூர் அருகே மின் கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharatமின்கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட் - வீடியோ வைரல்

author img

By

Published : Dec 2, 2022, 3:48 PM IST

தருமபுரி: தருமபுரி-திருவண்ணாமலை நான்கு வழிச்சாலைப் பணிகள், முதலமைச்சரின் சாலை விரிவாக்கத்திட்டத்தின்கீழ் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரூர் அழகிரி நகர் முதல் அரூர் வரையிலான சாலையில், இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல், புதிய சாலை அமைத்தல், என அகலப்படுத்தும் பணியானது ரூ.4182 லட்ச மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கே.ஆர்.எம்.எஸ் & ஆர்.எஸ். கன்ஸ்ட்ரக்சன்ஸ், ஒப்பந்தம் எடுத்து செய்துவருகின்றனர். இதில் இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியில் தரைப்பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், மண் கொட்டி சீர் செய்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரூர் - மொரப்பூர் சாலையில், அரூர் அடுத்த நேதாஜி நகர்ப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேதாஜி நகர்ப்பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம், கால்வாயில் அப்படியே மின் கம்பத்துடன் கான்கிரீட் போடப்பட்டுள்ளது.

VIDEO:மின்கம்பத்தை அகற்றாமல் கழிவுநீர் கால்வாயில் போடப்பட்ட கான்கிரீட்

இது வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ராட்சத கிரேன் மோதி அரசு பேருந்து சேதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.