தர்மபுரி: இண்டூர் அருகே சாலையின் மையப்பகுதியில் உள்ள சென்டர் மீடியன் மீது பள்ளி மாணவி மது அருந்திவிட்டு சாய்ந்து நின்றபடி தள்ளாடியுள்ளார். இதனை அடையாளம் தெரியாத நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து 4 நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது அருந்திவிட்டு சாலையில் குத்தாட்டம் போடும் வீடியோக்களை பார்த்திரும்போம். இப்போது மாணவிகளும் மது அருந்திவிட்டு ஆட்டம் போட தொடங்கிவிட்டனர். இதுகுறித்து மாணவ, மாணவிகளுக்கு புரிதல் ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மது அருந்திய மாணவியின் நலன் கருதி அவரது வீடியோவை வெளியிட வேண்டாம் என ஈடிவி பாரத் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: நகை பறிப்பில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது