தருமபுரி மாவட்டம் ஏஜெட்டி அள்ளி பகுதியில் அருந்ததியர், தலித், போயர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை மீண்டும் பயனாளிகளுக்கு வழங்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் பட்டாக்களை திரும்ப மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வீட்டுமனை பட்டா ரத்து: மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் - ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தருமபுரி: தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வீட்டுமனை பட்டா ரத்து: மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:32:36:1601434956-tn-dpi-01-free-land-cancel-protest-vis-7204444-29092020120236-2909f-00561-440.jpg?imwidth=3840)