வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி ஒகேனக்கல்லில் தருமபுரி மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ஜாஸ்மின், உதவி மாவட்ட துறை அலுவலர் ஆனந்த், ஒகேனக்கல் நிலைய அலுவலர்கள் மணிகண்டன், ராஜா, கோபால் ஆகியோர் கலந்துகொண்டு மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களை எவ்வாறு காப்பாற்றுவது, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் சுற்றுலாப் பயணிகளை எவ்வாறு மீட்பது தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டனர்.
மழைக்காலங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எவ்வாறு செல்வது, குழந்தைகளை காவிரி ஆற்றில் ஆழம் அதிகமான பகுதிகளில் குளிக்க சென்றவரை மீட்பது, தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினா் செய்து காட்டினா்.
ஒத்திகைப் பயிற்சியில் தீயணைப்பு நிலையங்களில் நீச்சல் தெரிந்த கமாண்டோ படை வீரர்கள் 30 பேர் கலந்துகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டனர்.