தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதியன்று சுற்றுலா பயணமாக வந்த சேலத்தைச் சேர்ந்த ஐந்து பேரில் மூன்று பேர் ஆலம்பாடி பகுதியில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இரண்டு பேரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது.
அதன்பின்னர், இரண்டு நாள் தேடுதலுக்கு பிறகு இன்று(நவ.24) காலை முகமது நவாஸ் என்ற சிறுவன் உடல் தொம்மச்சிகல் அருகே மீட்கப்பட்டது. ஆலம்பாடி பகுதியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!