கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க கபசுரக் குடிநீரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் வழங்கி தொடங்கி வைத்தார். இதனை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதன் காரணமாக தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுநாகப்பூ, முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடா, கற்பூரவள்ளி, நிலவேம்பு, அக்கரகாரம் உள்ளிட்ட 15 மூலிகைகள் கலந்துள்ளன.