குஜராத், டில்லி இஸ்லாமிய மத மாநாட்டிற்கு சென்று வந்த 35 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் தருமபுரி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பிலிருந்தனர்.
இவர்களின் சளி, இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பரிசோதனை முடிவுகள் வந்ததில் இவர்களுக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.
![பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டிற்கு அனுப்பிவைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-no-corona-35-delhi-people-go-to-house-img-7204444_04042020141944_0404f_1585990184_1.jpeg)
![பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டிற்கு அனுப்பிவைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-no-corona-35-delhi-people-go-to-house-img-7204444_04042020141944_0404f_1585990184_983.jpeg)
அதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் அனைவரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அவர்கள் பகுதி வட்டாட்சியருடன் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக அவர்கள் அனைவருக்கும் ஆட்சியர் நன்றி தெரிவித்தார்.